300 கிலோ ஹெராயின், பயங்கர ஆயுதங்கள்... சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பா? மனுவை ஒத்திவைத்த நீதிபதி
கேரள மாநிலம் கொச்சின் கடற்கரை பகுதியில் இருந்த படகை சோதனை செய்தபோது, அதில் 300 கிலோ ஹெராயின், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 16 பேர் உட்பட 20 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணையை அடுத்து, கடந்த ஜூலை மாதம், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, ஏராளமான செல்போன், லேப்டாப், சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். சர்வதேச போதை கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து, 10 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.