சென்னையில் இருந்து படையெடுத்த 2.66 லட்சம் பேர் - அமைச்சர் தகவல்

Update: 2023-01-14 09:12 GMT

பொங்கல் பண்டிகைக்காக கடந்த 2 நாட்களில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர், அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் சேவை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பயணிகளிடம் நிறை, குறைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 2 நாள்களில் 5 ஆயிரத்து 134 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர் பயணம் செய்துள்ளதாக கூறினார்.

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு லிங்க் தரப்பட்டுள்ளதாகவும், அதைக் கொண்டு பேருந்தின் இயக்கத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்