விடுமுறை கோரி அதிகாரியை அணுகிய காவலர்..ஆபாச வார்த்தைகள் கூறி திட்டி அனுப்பிய அதிகாரி
திருப்பத்தூரில் விடுமுறை கேட்ட ஆயுதப்படை காவலர் ஒருவரை, மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் தரக்குறைவாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே பாச்சல் பகுதியில் ஆயுதப்படை தலைமையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள் சிலர் பணிபுரியும் காவலர்களை தரக்குறைவாக நடத்தி வருவதாகவும், திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விடுமுறை கேட்கும் போது நிராகரித்து விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், விடுமுறை கேட்டு சென்ற ஆயுதப்படை காவலர் ஒருவரை துணை கண்காணிப்பாளர் விநாயகம் ஆபாச வார்த்தைகளை கூறி திட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.