மனைவியை அவதூறாக பேசியவர் மீது போலீசில் புகார்- ஆத்திரத்தில் அடித்து, உதைத்த கும்பல் - குமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரியில் மனைவியை அவதூறாக பேசியவர் மீது போலீசில் புகார் கொடுத்த கணவரை மூன்று பேர் சரமாரியாக தாக்கினர். இரணியல் அருகே ஆலங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமாரி என்பவரை அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவர் அவதூறாக பேசியுள்ளார். இது தொடர்பாக ராஜேஷ்குமாரியின் கணவர், போலீசில் புகாரளித்த நிலையில், ஆத்திரமடைந்த முகேஷ் நண்பர்களோடு சேர்ந்த புகாரளித்த கணவரையும், தடுக்க வந்த 70 வயது மூதாட்டியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அபிராம் மற்றும் ராகுல் என்ற இரு இளைஞர்களை கைது செய்த போலீசார், தப்பியோடிய முகேஷை தேடி வருகின்றனர்.