"ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம்"போலீசார் - பாஜக நிர்வாகிகள் காரசார வாதம் |BJP | tirupur

Update: 2022-12-03 16:57 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் காவல்துறையினரிடம் பாஜக நிர்வாகிகள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்தில் பயணித்த போது காவல்துறையினர், பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது, பாஜக மாவட்ட செயலாளர் ராஜா, காவலரை ஒருமையில் பேசியதுடன், ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பையும் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பிவைத்த நிலையில், இதுகுறித்து வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்