பழங்குடியினர் குடும்பத்தையே தாக்கிய போலீசார் - நெஞ்சை உலுக்கும் பகீர் சசம்பவம்..
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியினரை தமிழக போலீசாரும், வனத்துறையினரும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக எல்லையில் வசிக்கும் ராமன் என்பவர், அட்டப்பாடி பகுதியில் கூலி வேலை முடித்து விட்டு, வனப்பகுதி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவரை வழி மறித்த தமிழகத்தைச் சேர்ந்த மஞ்சூர் போலீசார் மற்றும் கைக்காட்டி வனத்துறை ஊழியர்கள், கஞ்சா தோட்டம் பற்றி கேட்டுள்ளனர். ராமனை கஞ்சா வளர்த்ததாக குற்றம் சாட்டி அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கைகளை கட்டி கிண்ணக்கூர் போலீஸ் சோதனை சாவடிக்கு கொண்டு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விசாரிக்கச் சென்ற ராமனின் மனைவி மற்றும் மகன்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. புதூர் காவல் நிலையத்தில் ராமன் புகார் அளித்த நிலையில், அவரும், அவருடைய மனைவியும் கோட்டத்தாரா பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.