ஆண் போல் வேடம் அணிந்து, டெம்போவில் குட்கா கடத்திய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் கும்பாரஹள்ளி சோதனைச்சாவடியில் வேகமாக சென்ற டெம்போவை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவர் ஆண் இல்லை, பெண் என்பதும் அவர் பெயர் ஈஸ்வரி என்பதும் தெரியவந்தது. டெம்போவில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.