போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டிய இளைஞர்...கஞ்சா விற்ற செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போலீசார்

Update: 2022-09-30 08:25 GMT

புதுச்சேரியில் உள்ள ஏனாம் பகுதிக்கு கஞ்சா விநியோகித்த இளைஞர்களை பிடிக்க சென்ற போது, போலீசாரை இளைஞர் ஒருவர் அரிவாளைக் காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24ம் தேதி மேட்டகருவில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பெட்டிரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதிஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ரீத்து பிரகாஷ், சிந்தாலா யாமினி பிரசாத் ஆகியோரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரிய வந்த நிலையில், விசாகப்பட்டினம் விரைந்த ஏனாம் போலீசார் ரீத்து மற்றும் சிந்தாலவை பிடிக்க சென்ற போது, அதில் ரீத்து காவல்துறையினரை திரும்பிப் போகுமாறு கூறி அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து ரித்துவை லாவகமாக மடக்கிப் பிடித்த போலீசார் மற்றொரு இளைஞரான சிந்தாலவையும் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ எடையுள்ள கஞ்சா, 3 செல்போன்கள், அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்...

மேலும், அவர்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்