தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டையில் நடைபெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியிட்டு விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைக்கருவி உற்பத்தியாளர்களுக்கு கலைமாமணி விருது, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார். நீட் தேர்வு தற்கொலைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மனதளவில் பாதிக்காவண்ணம் பாதுகாக்கும் கடமையும் அரசுக்கு உள்ளதாக தெரிவித்தார்.