போனில் பேச விடாத பெற்றோர்... 8-ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு | Chennai
சென்னையில், அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால், 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவர், 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது தந்தை, சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் சடலத்தை ராயபேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண் நண்பருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாகவும், செல்போனை பறித்து பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு பள்ளியில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.