விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோர் புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு

Update: 2022-09-16 08:20 GMT

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சக மாணவியின் தாயாரால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட மாணவன் பாலமணிகண்டனின் பெற்றோர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்த மாணவியின் தாய் மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க, முதல்வர் ரங்கசாமியிடம் சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்