பழனியில் நள்ளிரவில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. காவலாளி நெஞ்சில் பாய்ந்த குண்டு - சுட்டது யார்?
பழனியில் நள்ளிரவில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. காவலாளி நெஞ்சில் பாய்ந்த குண்டு - சுட்டது யார்?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே காவலாளி ஒருவர், நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் நள்ளிரவு 12 மணியளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதில், அந்த தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் கார்த்தியின் நெஞ்சில் குண்டு பாய்ந்து கீழே சரிந்தார். தோட்டத்தில் இருந்த சிலர், அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குண்டை அகற்றமுடியாமல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த பழனி போலீசார், தோட்டத்தில் கீழே விழுந்த துப்பாக்கிக் குண்டுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.