வெள்ளத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்... புரட்டிப்போட்ட கனமழை!
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளை மிகுந்த பாதிப்பிற்குள்ளாக்கியது... சர்சதா நகரில் வீடுகள், சாலைகள், கடைகள், சந்தைகள் என அனைத்து பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது... மக்கள் தண்ணீரில் தத்தளித்தபடி தங்கள் அன்றாட பணிகளைக் கவனித்து வருகின்றனர்... தென் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், பருவமழை பாகிஸ்தானின் பிற பகுதிகளையும் கடுமையாக தாக்கியுள்ளது... கனமழை பாதிப்புகளால் இதுவரை 300க்கும் அதிகமானோ பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...