"உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" பிரதமர் மோடியை விமர்சித்த பாக். அமைச்சர்.. உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்.
பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவை கண்டித்து உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத்தில், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவின் புகைப்படங்கள் எரிக்கப்பட்டன.
பின்னர், பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.