பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் சேலம் தினத்தந்தி, மாலைமலர் ஊழியர்கள் மரியாதை
தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் உள்ள தினத்தந்தி, மாலை மலர் அலுவலகங்களில் மரியாதை செய்யப்பட்டது... அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அனைவரும் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி தலைமையிலான நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.