கொரோனாவிலிருந்து மீண்ட ஓபிஎஸ் இன்று மாலை வீடு திரும்புகிறார்

Update: 2022-07-21 03:26 GMT

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ள, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இல்லம் திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 18 ம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் ஓ.பி.எஸ்., கவச உடையுடன் வந்து வாக்களித்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று மாலை இல்லம் திரும்ப இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்