"ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயருமா?" - அமைச்சர் செந்தில் பாலாஜி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோஙனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, வீரப்பன்சத்திரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பெண்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிந்தும், சிறுவர்கள் பெரியார், கருணாநிதி ஆகியோரின் வேடமணிந்தும் மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயருமா என்று கேள்வி எழுப்பினார்.