இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்படை முகாமை ஆய்வு செய்ய வந்த விசாகப்பட்டினம் கடற்படை தளபதி சாலை விபத்தில் காயமடைந்தார். நேற்று முன்தினம் கடற்கரை முகாம்களை ஆய்வு செய்ய வந்த கடற்படை தளபதி அசோக் லிமன், இன்று காலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த அசோக், மதுரை ராணுவத்தினர்களுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் தக்காளி இலவசம் என யார் கூறினாலும் பொதுமக்கள் அந்த விளம்பரத்தை திரும்பி பார்ப்பார்கள் என்ற நிலைமையை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் நிர்வாகம் தக்காளி இலவசம் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. 5 பேர் சாப்பிடும் அளவுக்கு ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் எனவும், மூன்று பேர் சாப்பிடும் அளவிற்கு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல் 30 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்ற அடிப்படையில் பிரியாணிக்கு தக்காளி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள காரையார் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜுன் 1 -ந் தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை தண்ணீர் திறக்காததால் இன்று அம்பை சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தண்ணீர் திறக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர், இதனால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அம்பை தாசில்தார் சுமதி இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் போட்டியிட்டார். இவர் நேரம் கடந்து பிரச்சாரம் மற்றும் பண பட்டுவாடா செய்ததாக கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது இந்த வழக்கிலிருந்து கப்பச்சி வினோத் விடுதலை செய்யப்பட்டார். இதனால் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வசுவபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரதாபன்(வயது 75). ஏடிஎம் பயன்படுத்த தெரியாததால் அந்த ஏடிஎம் மையத்துக்கு வந்த வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ரகசிய எண்ணை கூறியுள்ளார்.. ஆனால் இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி அந்த நபர் ஏடிஎம் கார்டை திருப்பி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பிரதாபனின் செல்போன் எண்ணிற்கு பணம் ரூ. 50,000 எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்த முதியவர், சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த சித்தோடு போலீசார் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு முதியவருக்கு உதவி செய்வது போல் நடித்து 50,000 ரூபாய் மோசடி செய்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்