"ரூ.1000 கொடுத்தா ரூ.2000 கடைசியில் ரூ.92 லட்சம் அபேஸ்" - உஷார்... உங்களுக்கும் நடக்கலாம்

Update: 2022-11-07 16:32 GMT

ரூ.1000 கொடுத்தா ரூ.2000 கடைசியில் ரூ.92 லட்சம் அபேஸ்" - உஷார்... உங்களுக்கும் நடக்கலாம்

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவரின் இன்ஸ்டாகிராமில், அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், வலைத்தள முகவரி லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த லிங்கை கிளிக் செய்து, அதில் சில டாஸ்க்குகளை பண முதலீடு செய்து நிறைவேற்றி வெற்றி பெற்றால், பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர், சுமார் 92 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், வங்கிக் கணக்கிற்கு பணம் வரவில்லை. இறுதியில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், ஆன்லைனில் மோசடி செய்த நபர்கள் தெலங்கானா மாநிலத்திலும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எழில் ராஜா,முத்துராஜா மற்றும் பால சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கைதான 3 பேரும் முகவர்களாக செயல்பட்டதும், இதற்கு மூளையாக செயல்பட்ட கோபிநாத் சாஸ்தா என்பவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்