லாலு குடும்பத்தினர் மீது தொடரும் சோதனை - சிக்கிய முக்கிய ஆவணங்கள் - அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது, ரயில்வே வேலைக்கு லஞ்சம் வாங்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் மகள்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முடிவில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பணம் மற்றும் 600 கோடி மதிப்பிலான முறைகேடு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுக்கு, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.