சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 140 ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆலையில் இன்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பில் இருவர் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது உராய்வினால் விபத்து ஏற்பட்டு ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஒருவர் காயமடைந்தார். கனத்த சத்தத்துடன் ஓர் அறை தரைமட்டமானவுடன் அங்கு பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களும் பட்டாசு ஆலையை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.