ஒருபக்கம் குறைகேட்கும் கலெக்டர்... அருகிலேயே ஹாயாக தூங்கி வழிந்த அதிகாரி..!வைரலாகும் வீடியோ
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அதிகாரியால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன் குமார் ஜடாவத் சரமாரியாக கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, அருகாமையில் அமர்ந்த வேளாண்மைதுறையின் நேர்முக உதவியாளரான விஜயராகவன் மெய் மறந்து தூங்கி வழிந்தபடி இருந்தார்.