தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி, ம.தி.மு.க. சார்பில் வரும் 20ம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை அகற்றக்கோரும் கையெழுத்து இயக்கத்தை, 20ம் தேதி காலை 11 மணிக்கு, சென்னையில் தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில், பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.