வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய அலுவலக உதவியாளர்... லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

Update: 2023-07-12 02:16 GMT

பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. கூலி வேலை செய்து வரும் இவர், தனது மாமனார் உயிரிழந்ததை அடுத்து, சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். வெகுநாட்கள் ஆகியும் சான்றிதழ் வழங்காமல், வருவாய் அலுவலர்கள் இழுத்தடித்ததால், லட்சுமி நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார். அப்போது அவர்களிடம் பேசிய அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவர், சான்றிதழ் கிடைப்பது சிரமம் என்றும், உயர் அதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சான்றிதழ் வெகுவிரைவில் கிடைத்து விடும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லஷ்மி, 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் எனக்கூறி, அடகு கடையில் தனது நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகர் வாங்கி எண்ணியபின், சான்றிதழ் கிடைத்து விடும் எனக் கூறும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்