விதிகளுக்கு புறம்பான நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பதிவு எண் தகடுகளின், அளவையும் வாகனப் பதிவுக் எண்களையும் பரிந்துரை செய்யப்படுகிறது.
- இவற்றை மீறி பல வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- எனவே, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி அன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகனத் தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
- இதில், 6 ஆயிரத்து 170 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- இந்நிலையில், இவ்வாறு விதிகளுக்கு புறம்பான நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.