புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையத்தை, மதுப்பிரியர்கள் மது அருந்தும் கூடமாக உபயோகித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, ஓடமுயன்ற மதுப்பிரியர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் மது அருந்துவது தவறு என உணர்த்திய போலீசார், அங்கு வீசப்பட்ட மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை அகற்றுமாறு கூறினர். மதுப்பிரியர்கள் அகற்றிய குப்பைகளை போலீசார் தீயிட்டு எரித்தனர்.