உள்ளூர் சரக்கு வேண்டுமா? வெளிநாட்டு சரக்கு வேண்டுமா? - கூவிக்கூவி விற்கும் வடமாநில இளைஞர்..
உத்தர பிரதேச மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்பது போல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வாகனத்தில் கொண்டு வந்து மதுபானங்களை கூவி கூவி விற்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இணையத்தளத்தில் பரவி வரும் விடியோ ஒன்றில் மது பாட்டில்களை ஏற்றி வரும் ஒரு வாகனம் உள்ளூர் மதுபானம் முதல் வெளிநாட்டு மதுபானங்கள் வரை அனைத்தும் கிடைக்கும் என ஒலிபெருக்கிகளை அலறவிட்டபடி மதுபான விற்பனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உத்தர பிரதேஷத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகளும் எழுந்துள்ளது.