சென்னை அருகே 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலியை கொன்ற வடமாநில இளைஞர்- வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்

Update: 2023-02-21 08:37 GMT
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தகாத உறவால் இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • சோழபுரம் அடுத்த இருளிப்பாட்டில் வசித்து வந்தவர் அசாமை சேர்ந்த சுமிதா பஹர்.
  • இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், அருகில் வசித்து பீகாரை சேர்ந்த குட்டு சகானி என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
  • இதில், இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுமிதா பஹர் மற்றும் இரு குழந்தைகளையும் சகானி தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தப்பியோடிய குட்டு சகானியை பீகாரில் வைத்து கைது செய்தனர்.
  • விசாரணையில், சுமிதா பஹரியின் தகாத உறவு அவரின் கணவருக்கு தெரிந்து போனதால், சகானியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதும், இதற்கு சகானி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
  • இதில், இரு பச்சிளம் குழந்தைகளையும், சுமிதா பஹாரியையும் தாக்கி கொலை செய்த சகானி, ஆந்திர வழியாக பீகாருக்கு தப்பி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
  • இதையடுத்து, பொன்னெரி நீதிமன்றத்தில் சகானியை ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்