"ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்பட கூடாது" - முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
"ஒரு மாற்றுத்திறனாளிகூட வருத்தப்பட கூடாது" - முதல்வர் முதல்வர் ஸ்டாலின் பேச்சுர்
ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்து விடக்கூடாது என்று தமிழக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, இந்த துறையை தமது தனி கவனிப்பில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலுவலகம் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
திருமண நிதியுதவியானது இனிமேல் முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், உலகவங்கி நிதியுடன்
ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.