"பணம் இல்லாத ஒரே காரணம்".. டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - மேற்படிப்பை தொடர முடியாத அவலம்
திருவண்ணாமலையில், குடும்ப வறுமை காரணமாக பட்டதாரி பெண் டிராக்டர் ஓட்டி வருகிறார். மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் வேடியம்மாள் தம்பதியின் மகள் கலைசெல்வி. இளங்களை கணிதவியல் பட்டதாரியான இவர், குடும்ப வறுமை காரணமாக நெல் அறுவடை இயந்திர டிராக்ர ஓட்டி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், பட்டப்படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததாகவும், பணம் இல்லாத காரணத்தினால் படிப்பை தொடர முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.