திருப்பதியில் சாதாரண அறைகளின் வாடகை உயர்வு இல்லை - தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி
திருப்பதி மலையில் சாதாரன பக்தர்கள் தங்கும் அறைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். திருமலையில் சில தினங்களுக்கு முன்பு 172 அறைகளின் வாடகையை தேவஸ்தான நிர்வாகம் உயர்த்தியது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்தும் கண்டனம் எழுந்த நிலையில் நாராயணகிரி கட்டட வளாகத்தில் 120 கோடியில் மேம்படுத்தப்பட்ட விஐபி அறைகளின் வாடகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சாதாரண பக்தர்களுக்கான அறைகளின் வாடகை உயர்த்தப்படவில்லை என்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார். மேலும் ஏற்கனவே பக்தர்கள் தங்குவதற்கு உள்ள 4 சமுதாய கூடங்களுடன் 100 கோடி ரூபாய் செலவில் மேலும் ஒரு சமுதாய கூடம் கட்டுவதற்கு நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.