இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2022)
PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2022) | Night Headlines | Thanthi TV
"எஸ்.எஸ்.எல்.வி.- டி1 மிஷன் தோல்வி"
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி.- டி1 ராக்கெட் திட்டம் சென்சார் இழப்பால் இன்று தோல்வி...
இரண்டு செயற்கைக்கோள்களையும் இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
விரைவில் எஸ்.எஸ்.எல்.வி.- டி2 ராக்கெட்டை உருவாக்குவோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்...
--------------------------------------
"மக்கள் கருத்துக்களை கூறலாம்"
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது குறித்து, பொதுமக்களிடம் கருத்துகேட்பு...
வரும் 12ஆம் தேதி வரை மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு இன்று அறிவிப்பு...
--------------------------------------
கருணாநிதி நினைவுதினம் - அமைதி பேரணி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் இன்று அமைதிப்பேரணி...
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...
கருணாநிதி நினைவு தின மாரத்தானில் 40 ஆயிரம் பேர் பங்கேற்று, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்து சாதனை...
--------------------------------------
விஸ்வநாதன் ஆனந்த்-க்கு உயரிய பதவி
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தேர்வு...
தலைவராக மீண்டும் ஆர்காடி வோர்க்கோவிச் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு...
--------------------------------------
"சர்வதேச ஆதரவு தேவை"
சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை என தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) கோரிக்கை...
சீனா - தைவான் இடையே போர்ப்பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ட்விட்டரில் இன்று பதிவு...
--------------------------------------
இந்தியா பதக்க வேட்டை
காமன்வெல்த் போட்டிகளில், அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் இன்று அசத்தல்...
16 ஆண்டுகால காமன்வெல்த் பதக்க கனவை நனவாக்கி, இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை...
--------------------------------------