சென்னையில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை - சிக்கிய பொருட்கள் | NIA | Chennai

Update: 2023-04-07 02:21 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எட்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 82 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், ஆயிரம் சிங்கப்பூர் டாலர், 300 கிராம் தங்கம், 10 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கேரள கடற்பகுதியில், கடந்த 2021-ஆம் ஆண்டு, 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே-47 ரக துப்பாக்கிகளை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்ட, போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அபைப்பினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதைத் தொடர்ச்சியாக, சென்னை, திருவள்ளூர், கேரளா ஆகிய இடங்களில், பல்வேறு கட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போரூர் ஐயப்பன், குன்றத்தூரைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ், கோவூர் சுரேஷ் குமார், பம்மல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் ஆகியோரின் இல்லங்களிலும், மண்ணடி பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதிகளிலும், பாரிமுனை ஈவினிங் பஜாரிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் இருந்து 82 லட்ச ரூபாய் ரொக்க பணம், 300 கிராம் தங்க நகைகள், 1000 சிங்கபூர் டாலர்கள், 10 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்