NEXT தேர்வு எதிரொலி - "எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல" - குமுறும் மாணவ மாணவிகள்

Update: 2023-07-12 03:23 GMT

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால் இதற்கு முன்பு பிஜி நீட் என்கிற நுழைவுத் தேர்வை எழுதி வந்தனர். அதற்கு மாற்றாக, மத்திய மருத்துவ கல்வி இயக்ககம் நெக்ஸ்ட் எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. முதலாவது நெக்ஸ்ட் தேர்வு, அடுத்த வருடம் மே மாதத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசிடம் கலந்து பேசி தமிழக அரசு நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்