ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி. இவருக்கும், ராமு என்பவருக்கும் இடையே கோயில் இடத்தில் உள்ள கடை சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. கடையை காலி செய்ய கீர்த்தி மறுத்ததால், அடியாட்களுடன் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஷ்மீரில் இருந்து பிரபாகரன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ராமு தரப்பினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றொரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், படவேடு கிராமத்தை சேர்ந்த திமுக வடக்கு ஓன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர் என்பவர் அடியாட்களை ஏவி விட்டு தன் மனைவி கீர்த்தியை தாக்கியதாக கூறியுள்ளார். இந்த பிரச்சினையை டிஜிபியும், முதலமைச்சரும் தலையிட்டு தீர்க்க வேண்டும் என ஆடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.