மாமியாரை தீயிட்டு எரித்து கொன்றாரா மருமகள்..? தாய் இறந்த துக்கத்தில் மகன் | Nellai

Update: 2022-10-29 08:03 GMT

நெல்லையில் மூதாட்டி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தை கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லையை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் அண்ணாமலை. திருமணமான இவர் தன் தாயுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டில் தீடிரென்று தீ விபத்து ஏற்பட்டதில் இவரின் தாய் அரசம்மாள் தீயில் பலியானர். இதையடுத்து போலீசார் விசாரிக்கையில், தனது தாய் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இவர்கள் வீட்டில் சில நாட்களாக மாமியார் மருமகள் சண்டை நடந்து வந்தது தெரியவர சந்தேகமடைந்த போலீசார், இச்சம்பவத்தை கொலையா? தற்ககொலையா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்