நீட் விவகாரம்..."அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்த தவறான மனு..." - அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய அதிமுக அரசு, தேசிய மருத்துவ ஆணைய சட்டம், 2019 என்பது உள்ளிட்ட மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல், ஏற்கனவே ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட முந்தைய சட்ட விதிகளைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தவறாக வழக்கு தொடர்ந்ததாக கூறியுள்ளார்.
அதிமுக அரசால் தவறான சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கும், மாணவர்கள் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட சட்டங்களுடன், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் முடிவுக்கு செயல்வடிவம் தரும் வகையில், உரிய மனுக்கள் - அதாவது ஒரிஜினல் சூட் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதிமுக அரசின் தவறான வழக்கினை திரும்ப பெற்றதை- ஏதோ நீட் தேர்வு வழக்கையே திரும்ப பெற்று விட்டது போல திசை திருப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.