"நான்சி எங்கே?"என கத்திக்கொண்டே சபாநாயகர் கணவர் மீது சுத்தியால் தாக்குதல்-அமெரிக்காவில் அதிர்ச்சி
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவரை மர்ம நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கலிபோர்னியா மாகாணத்தின் சான் இப்ரான்சிஸ்கோ நகரில் நான்சியின் வீடு அமைந்துள்ளது... திடீரென்று கண்ணாடிக் கதவை உடைத்துக் கொண்டு சுத்தியலுடன் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், மிகவும் ஆக்ரோஷமாக "நான்சி எங்கே?" என்று கத்தியுள்ளார்... ஆனால் நான்சி பெலோசி வாஷிங்டன் அலுவலகத்தில் இருந்த நிலையில், அவரது கணவர் பவும் பெலோசி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்... இதில் பவுலின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் குற்றவாளியைக் கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டது 42 வயதான டேவிட் டெபாப் என்பது கண்டறியப்பட்டது... காயமடைந்த பவுல் பெலோசிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உடல் நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்...
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்... சபாநாயகரின் கணவர் பவுல் பெலோசி, கடந்த மே மாதம் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 5 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.