சென்னையில் இருந்து புறப்பட்ட எம்வி எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல், இலங்கையின் திருகோணமலைக்கு சென்றது. இதை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருக்கோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி, ஆளுநரின் செயலாளர் உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். எம்வி எம்பிரஸ் கப்பலில் வந்த பயணிகளுக்கு திருகோணமலையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கடந்த 5ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.