சொத்துத் தகராறில் நடந்த கொலை - கொலை செய்துவிட்டு தப்பியோடும் சிசிடிவி காட்சி
சென்னையில், சொத்துத் தகராறில் உறவினரைக் கொலை செய்துவிட்டு, கொலையாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை அபிராமபுரம் படவட்டான் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபரி பொன்ராஜ். இவருக்கும் இவருடைய உறவினர் அற்புதராஜ் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, பொன்ராஜ் வீட்டிற்கு சென்ற அற்புதராஜ், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அற்புதராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கியதில், பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்பு தனது மனைவிக்கு போன் செய்த அற்புதராஜ், நடந்த சம்பவங்களை கூறிவிட்டு தலைமறைவாகினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பான விசாரணையில், இந்த கொலை பொன்ராஜ் உட்பட 3 பேர் செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் கொலை செய்து விட்டு, கொலையாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சியையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.