திகிலூட்டும் முறையில் தாயை கொன்ற மகன்..வீடு முழுக்க தண்ணீர்..கதவில் பசை.. பக்கா ஸ்கெட்ச் - இதுவரை கண்டிராத பயங்கரம்

Update: 2022-12-11 04:50 GMT

மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் 74 வயதான வீணா கபூர்... இவருக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் நெவின் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் 2வது மகன் சச்சின் கபூர் மும்பையில் உள்ளார்.

பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் சச்சின் கபூர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக வேலையை இழந்ததாக தெரிகிறது. இதனால் வேலை இல்லாமல் தன் தாயுடன் வசித்து வந்திருக்கிறார். 43 வயதான மகன் பொறுப்பில்லாமல் இருப்பதை அறிந்த வீணா கபூர் அவரை அவ்வப்போது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை, சச்சரவாக இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில் தன் வசமிருந்த 10 கோடி ரூபாய் சொத்துகளை தன் மூத்த மகனுக்கு தர திட்டமிட்டு இருக்கிறார் வீணா கபூர். தனக்கும் சொத்தில் பாதி வேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டு இருக்கிறார் சச்சின் கபூர்.

இத்ந நிலையில் திடீரென தன் தாயிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால் பதறிப்போன மூத்த மகன் வீட்டு காவலாளியை வைத்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த போது தான்

மதேரன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார் வீணா கபூர்.

உடலெங்கும் ரத்த காயங்கள் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதை உறுதி செய்தது. குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தேடிய போது அதை எல்லாம் அவர் ஏற்கனவே திட்டமிட்டு மறைத்து வைத்ததும் உறுதியானது.

கடைசியில் இளைய மகன் சச்சினை பிடித்து விசாரித்த போது தான் தாயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தன் அண்ணனுக்கு சொத்துகளை முழுவதும் தாய் தர திட்டமிட்டு இருப்பதை அறிந்து அவருடன் சண்டை போட்டதாகவும் ஒரு கட்டத்தில் அவரை பேஸ்பால் பேட்டால் அடித்துக் கொன்றதையும் வாக்குமூலமாக அளித்தார்.

அதிலும் தாய் எந்த விதத்திலும் தப்பி விடக் கூடாது என்பதற்காக வீடு முழுக்கவே தண்ணீரை கொட்டி வைத்தும், பால்கனி பகுதிக்கு சென்று விடாமல் இருக்க நாற்காலிகளை போட்டு வைத்திருந்ததும், கதவு துவாரத்தில் பசையை வைத்து மறைத்தது என பக்காவாக பிளான் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்த மகன் சச்சின் கபூரை கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்த வேலைக்காரர் மண்டலையும் கைது செய்தனர். சொத்துக்காக தாயை மகனே கொடூரமாக கொலை செய்து வீசிய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்