ஒரே ஒரு டோஸ்- நின்று போன இதயத்துடிப்பு - குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்கலாமா?
இத்தனைக்கு அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவே...இருமல் சிரப் கொடுத்துள்ளனர்.
இருமல் சிரப்பை உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலை மோசமடையவே... குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் நாடித்துடிப்பு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சிபிஆர் சிகிச்சை அளித்ததால் அதிர்ஷ்டவசமாக குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இருமல் சிரப்பில் உள்ள குளோரோபெனிரமைன் மற்றும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கலவைகள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்பது முன்னரே மருத்துவர்கள் எச்சரிக்கும் ஒன்று தான்.