அமெரிக்க நகரங்களை ஏமாற்றி புரிந்துணர்வு ஒப்பந்தம்? - நித்யானந்தாவின் புதிய லீலைகள்
நித்யானந்தாவின் கைலாசா நாடு, அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏமாற்றி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஜனவரி 12ம் தேதி நுவெர்க் நகரத்திற்கும், கைலாசாவுக்கும் இடையே சகோதரி நகர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கைலாசா நாட்டின் விவரங்களை சரி பார்க்காமல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதகாவும், மேயர்கள் நகர சபைகள் மட்டுமல்லாது அரசாங்கத்தினரும் கைலாசாவிடம் ஏமாந்துள்ளதாக அமெரிக்க ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.