கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் - 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு லட்சத்து நான்காயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேறும் மாணவிகளுக்கு மாதம் தோரும் 1000 ரூபாய் வழங்கும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், நாசர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் முதல்கட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றல் குறைந்து,12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.