ராக்கெட் பாகங்கள் விழும் அதிசய காட்சி.. சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது..? முதல் அட்டெம்ப்டில் பாஸா? ஃபெயிலா?நிலவில் கால் பதிக்கும் இந்திய சின்னம்

Update: 2023-07-16 03:30 GMT

நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலம் எங்கு உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:35 மணிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துக் கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வாயிலாக  விண்ணில் சீறி பாய்ந்தது. 16 நிமிடங்களில் விண்வெளியில் சந்திரயான் - 3 விண்கலத்தை புவி நீள் சுற்றுவட்டப்பாதையில் நிறுவியது.

ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் ராக்கெட் பாகங்கள் விழும் காட்சியும், விண்கலம் பிரியும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

புவி நீள் சுற்றுவட்டப்பாதையில் சுற்ற தொடங்கிய விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண் காணித்து வந்தனர். நிலவை நோக்கி பயணம் செய்யும் சந்திரயான் - 3 விண்கலம், பூமியை 5 முறை சுற்றிய பின்னர், புவி மற்றும் நிலவின் சம ஈர்ப்பு விசை புள்ளி பகுதியில் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக புவி நீள் சுற்றுவட்டப்பாதையை சுற்றும் சந்திரயான் -3 விண்கலம் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து விண்கலத்தை உந்து விசை வாயிலாக வெற்றிகரமாக 2 ஆவது சுற்று

பாதைக்கு விஞ்ஞானிகள் அனுப்பியிருக்கிறார்கள்... விண்கலம் சிறப்பாக பயணிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். பூமிக்கு அருகே 173 கிலோ மீட்டர் தொலைவிலும் பூமிக்கு அப்பால் 41 ஆயிரத்து 762 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள பாதையில் விண்கலம் சுற்றுகிறது.

இன்னும் 40 நாட்கள் விண்ணில் பயணிக்கும் சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தரையிறக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அப்படி விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும், அதிலிருந்து வெளியேறி

நிலவில் தடம் பதிக்கும் பிரக்யான் ரோவர், ஆராய்ச்சிக்கு தேவையான தகவல்களை திரட்டுவதுடன் இந்திய தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோவின் சின்னத்தை நிலவில் பதிக்கும். ரோவரின் பின்பக்க கால்களில் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்