ஹூண்டாய் நிறுவனம் தொடங்கிய புதிய திட்டம் "Mission Chennai " - தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

Update: 2022-12-01 10:19 GMT

சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் "Mission Chennai " என்ற திட்ட வாகனத்தை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த வாகனம், மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகம் மற்றும் அனைத்துப் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக சாலை பாதுகாப்பு சம்பந்தமாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்