அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. இன்று காலை எத்தனை மணிக்கு தீர்ப்பு?

Update: 2023-07-04 03:00 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்த போது மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டது தவறு என்றும் வாதிட்டார்.

அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி

அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை என்பதால், அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்