கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 110 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு ராபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு110 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு குவிண்டால் கோதுமையின் விலை 2,015-இல் இருந்து 2,125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, பார்லியின் விலை 100 ரூபாயும், கடுகு விலை 400 ரூபாயும், கடலை விலை 105 ரூபாயும், மிக அதிகபட்சமாக மசூர் பருப்பின் விலை 500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.