திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு என அழைக்கப்படும் சுப்பிரமணிய சாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி திருவிழா 12 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரவுள்ளார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் மார்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.