மணிப்பூர் கலவரம்.."மகளிர் அமைப்புகள் மீது இந்திய ராணுவம் குற்றச்சாட்டு"

Update: 2023-06-27 12:28 GMT

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் மகளிர் அமைப்புகள் திட்டமிட்டு தலையிடுவதாக, இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருவதால், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற் காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மகளிர் அமைப்புகள் தடுத்து நிறுத்தி வருவதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. திட்டமிட்டு வழிகளை மறித்து போராட்டம் நடத்தி வருவதுடன், பாதுகாப்பு படையினரை செயல்படவிடாமல் தடுப்பதாகவும் கூறியுள்ளது. மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் காக்க பாதுகாப்பு படையினர் இரவு-பகலாக போராடி வரும் சூழலில், மகளிர் அமைப்புகளின் இத்தகைய செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளுக்கு, அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்